இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் இம்மாதம் 28ஆம் தேதி ஓமானில் இருந்து புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரியா உரம்
அதன்படி, ஜூலை 15ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு உரிய உரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது.
யூரியா உரத்தின் இருப்பு உர செயலகம், வர்த்தக உர நிறுவனம் மற்றும் இலங்கை உர நிறுவனம் ஊடாக கமநல சேவை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.
கமநல சேவை நிலையம்
கமநல சேவை நிலையங்கள் ஊடாக 50 கிலோகிராம் உர மூட்டை 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நெல் மற்றும் மக்காச்சோள விவசாயிகளுக்கு அடுத்த யாலா பருவத்திற்கு உரம் விநியோகிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















