கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என செல்லமாக அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டின் வாசல் பகுதியில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகியவாறு சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை அண்மையில் பண்டாரகமை – அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஆயிக்ஷா உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியிருந்த நிலையில் மற்றுமொரு சிறுமியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.