இந்தியாவின் கடனுதவித் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் (16-06-2022) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிதியை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்காக ஒதுக்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அரிசி தட்டுப்பாடு மற்றும் அசாதாரண விலை உயர்வை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.




















