பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.