ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யும் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறியுள்ளது.
யுரெங்கோய்ஸ்கோயே பகுதியில் உள்ள எரிவாயு குழாயில் இவ் வெடி விபத்து ஏற்பட்டதாக கேஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.