எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்புச் சந்தைக்காரர்கள் சார்பில் எரிபொருள் சேகரிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எண்ணெய் கடத்தல்காரர்களால் நிலைமை மோசமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் மாஃபியா
இந்த எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரும் இராணுவத்தினரும் மௌனம் சாதிப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் அநாதரவாகியுள்ளனர். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எரிபொருள் மாஃபியா இன்று நல்ல வருமான ஆதாரமாக மாறியுள்ளது. கருப்பட்டி கடைகளுக்கு எரிபொருள் சேகரிக்கும் கொள்ளையர்கள் பெற்றோல் போத்தல் 650 ரூபாவிற்கும், டீசல் போத்தல 550 ரூபாவிற்கும் விற்கின்றனர்.
அத்தியவசிய சேவைகளான சுகாதார சேவைகளை ஊக்குவிப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த கொள்ளையர்களால் இதுவரையில் அவ்வாறானதொன்று நடைபெறவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.