நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகிறது. அதிலும் தற்போது விஷம் சார்ந்த நோய் பரவலுக்கு மருந்துகள் இல்லாமல் மக்கள் அல்லல் படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற சபை அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
பாம்பு கடி, விசர் நாய் கடி போன்றவற்றுக்கு மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. ஏ.ஆர்.வி தடுப்பூசி உட்பட பல தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. இதனால் பல உயிர்கள் பறிபோகிறது.
இந்த நிலையில் இனிமேல் மக்கள் நாய் மாதிரி குரைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இது தவிர யாழ்ப்பாணம் தீவுப் பகுதியில் பணி புரியும் சுகாதாரம் சார்ந்த ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றேன்.
ஆனாலும் அவ்வாறு ஒரு செயற்பாடு இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
இதனால் இடம்மாற்றங்கள் வழங்கப்படும் போது மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் தெய்வகத்துக்கு கடமைக்கு செல்வதற்கு மறுக்கிறார்கள்.
இதனால் மருத்துவ மனைகளில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்கிறது என்றார்.