யாழ்ப்பாணம் – கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று காலை குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவினர் சிலர் வந்து, அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அறிவித்தல் ஒட்டியதால் இக் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால், அரச ஊழியர்களுக்கு தான் முன்னுரிமையா என, எரிபொருளுக்காக வரிசையில் நின்ற மக்கள் விசனமடைந்தததுடன், ஒட்டிய அறிவித்தலையும் கிழித்து எறிந்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர். மேலும் சிலர் சென்று பிரதேச செயலருடன் பேசுமாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அறியமுடிகின்றது.