திஸ்ஸமஹாராம – புஞ்சி அக்குருகொட – தில்லிய பகுதியில் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் 54 வயதான தாயின் ஒரு கையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே குறித்த பெண்ணும் அவரது மகளுக்கும் இவ்வாறு தாக்குதல் உள்ளாகியுள்ளனர்.
ஜீப் வண்டியில் வந்த இருவர் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் 36 வயதுடைய மகளுக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிந்து பொடி என்ற போதைப்பொருள் வர்த்தகர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.