தமிழகத்தின் மதுரையில் இளைஞர் ஒருவர் மணமகள் தேவை என வீதி வீதியாக போஸ்டர் ஒட்டிய நிகழ்வு நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரை சேர்ந்த சுதர்சன்-சந்திரா தம்பதியின் மகன் ஜெகன்.
27 வயது பட்டதாரி இளைஞரான இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரைவில் திருமணம் ஆக ஜெகன் நூதனமுறையை கையில் எடுத்துள்ளார்.
அதாவது மணமகள் தேவை என்று தனது புகைப்படத்துடன் விவரங்கள் அடங்கிய போஸ்டர்களை வீதி வீதியாக சுவர்களில் ஒட்டியுள்ளார். இவ்வாறாக அவர் மதுரை மாநகர், புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளார். பி.எஸ்.சி பட்டதாரியான தாம் மாதம் 40 ஆயிரம் சம்பாதிப்பதாக அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.