இயக்குனர் விக்னேஷ் சிவன் தேனிலவு பயணத்தை முடித்துக் கொண்டு அஜித் படத்தின் பணிகளைத் தொடங்க இருக்கிறார். இதற்காக தனது உதவி இயக்குனர்களை தாய்லாந்து அழைத்துச் சென்றிருப்பதாக தெரிகிறது. நேரம் கிடைக்கும் போது கதை விவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார். தேனிலவு முடிந்து வரும் போது முழுக்கதையையும் பக்காவாக தயார் செய்து விடுவார் என்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் தாங்கள் எடுக்கும் படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது நயன்தாரா தாலியோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.