வீதியை மறித்து போராட்டம்
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியை மறித்து போராட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தமக்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்டுத்து வருகின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றும் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.