கொழும்பு – தெமட்டகொட பகுதியில் எரிபொருள் கொள்வனவு செய்ய வரும் பொது மக்கள், பொலிஸார் மீது குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர்.
அதன்படி குறித்த பகுதியில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் போதும் பொலிஸார் வாகனங்களை கொண்டு வந்து இடையில் சென்று எரிபொருளை பெற்றுக் கொள்வதாகவும், இரண்டு அல்லது மூன்று முறை கூட ஒரே பொலிஸ் உத்தியோகத்தர் வாகனங்களில் வந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தியாவசிய சேவை என தெரிவித்து வைத்தியர்கள், பொலிஸார் உள்ளிட்டோர் வந்து எரிபொருளை வாகனங்களில் நிரப்பிக் கொண்டு செல்லும் நிலையில் அன்றாடம் முச்சக்கரவண்டி மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் தாம் நாள் கணக்கில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.