இலங்கையில் நாள் ஒன்றில் ஆறு பேர் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புகையிலை மற்றும் மதுபானம் சார் அதிகார சபையின் தலைவர் டாக்டர் சமாதி ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நாட்டு மக்களின் புகைப்பழக்கம் 6 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
பயன்பாடு
இதேவேளை புகையிலை பயன்பாடும் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அதிகரிப்பு
எனினும் ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.