தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) அவர்கள் நேற்றைய தினம் (29-06-2022) இரவு அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35ஆவது ஆண்டாக நடாத்தும் “மாபெரும் பேரவைத்தமிழ் விழாவில்” பங்கேற்பதற்காக வடஅமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜுலை 1ஆம் திகதி தொடக்கம் 4ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும், இந்த பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் “தமிழர் தரப்பு நிலைப்பாடு” தொடர்பாக கலந்துரையாட சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.