தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமது சேவைகளை வழங்கும் திகதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வௌ்ளிக்கிழமை மற்றும் இரண்டாம் திகதி சனிக்கிழமை தொடக்கம் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த நிறுவனத்தின் சேவைகள் வழங்கப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கைப்பேசி அலைவரிசையில் இருந்து 225 அல்லது நிலையான தொலைப்பேசியில் இருந்து 1225 என்ற இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், www.ntmi.lk என் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் அல்லது e-channeling எப்ளிகேஷன் மூலம் குறித்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், வெள்ளி மற்றும் சனி தவிர்ந்த ஏனைய தினங்களில் இதற்காக உங்களுக்கு வசதியான நேரத்தை ஒதுக்கிக் கொண்டு வருமாறு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.