இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியிலேயே வைத்துள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நாட்டில் எம்மை பின்தொடர்பவர்கள் யார்? நமக்குப் பின்னால் நிற்பவர்கள் யார்? என்பது தொடர்பில் எந்தநேரமும் அவதானம் இருக்கவேண்டிய காலத்துக்குள் நாம் இருக்கின்றோம் என்பதே சகலரும் நினைவில் கொள்ளவே வேண்டும்.
ஏனெனில், வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்தில் பணத் மீள எடுத்துக்கொண்டு, ஒருவர் வெளியேறியுள்ளார்.
அவரை பின்தொடர்ந்தவர் தனக்கு 1,000 ரூபாய் பணம் வேண்டுமென கேட்டுள்ளார். அவ்வளவு பணத்தை தன்னால் தரமுடியாதென பணத்தை மீளப்பெற்றவர் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பணம் எடுத்தவரை சரமாரியாக குத்தியுள்ளார்.
அதில் ஸ்தலத்திலேயே அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம், கொழும்பு – கட்டுநாயக்க பிரதான வீதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகையால், சகலரும் கவனமாக இருப்பதே நல்லது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.