மன்னார் மாவட்டத்தில் முறையற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பாகவும் நாளுக்கு நாள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் அவர்களுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அனுப்பி வைத்துள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சாதாரண நிலமையை விட பல மடங்கு எரிபொருள் வந்துள்ளன புள்ளிவிபரங்களின்படி. ஆனால் வாகனத்திற்கு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்கிறது ஒழுங்கு முறையாக எந்தவித சிஸ்ரமும் உருவாக்கப்படவில்லை.
அதிகாரிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
அதிகாரிகள் தமது இஷ்டத்திற்கு செயற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகக் குறைந்த சனத்தொகை கொண்ட மாவட்டத்தில் சிஸ்டத்தை உருவாக்குவது ஓரளவு இலகுவானது. அசாதாரண சூழ்நிலையில் பணி செய்வது என்பது சவாலுக்கு உரியது என்பதை நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.
எனவே மீனவர்களும், விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரச ஊழியர்கள் அலுவலக அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் வழங்கும் முறைமை முற்றிலும் முரனானது. அதில் பல ஆள் மாறாட்டமும் வணிகமும் நடைபெறுகின்றன. ஆதாரம் உண்டு.

சகல வாகனங்களுக்கும் பங்கீட்டு அட்டை வழங்குங்கள். மன்னார் மாவட்டம் என்பது 05 பிரதேச செயலாளர் பிரிவை கொண்டது. நகரத்தை கடந்தும் கிரமங்களில் உள்ளவர்களுக்கும் எரிபொருள் கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்.
புதிய எரிபொருள் மாபியா முகவர்கள்
மாந்தை மேற்கு பிரதேசத்தில்; ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் கூட இல்லை. ஒழுங்குமுறையான சிஸ்டம் இன்மையால் அவசியம் எரிபொருள் தேவைப்படுகிறவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் புதிய எரிபொருள் மாபியா முகவர்கள் உருவாகி விட்டனர். ஒரு லீற்றர் பெற்றோல் 2000 ரூபாவிற்கு மேல் விற்பனை ஆகிறது. டீசல் 1000 ரூபாவுக்கு மேலாக மண்ணெண்ணை 1000 ரூபாவுக்கு மேலாக வேறு மாவட்டங்களுக்கு கொண்டு போய் விற்பனை செய்கிறார்கள்.இதை உருவாக்கியது சிஸ்டம் இல்லாத எரிபொருள் பகிர்வே.
சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு எதிராக முறைப்பாடு
தயவு செய்து உடனடியாக ஒரு முறைமையை உருவாக்குங்கள் சிஸ்டம் இன்மையால் முரண்பட்டு நானாட்டான் பிரதேச செயலாளர் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்த சம்வங்களும் நிகழ்ந்துள்ளன. ஒரே நபர்கள் மாறி. மாறி எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பயன் பெறுகிறார்கள்.
ஆகவே இந்த நிலை தொடர்ந்தால் மன்னார் மாவட்டத்தில் மிகப் பெரும் வன்முறை தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை தடுப்பதற்கான தார்மீக பொறுப்பும் கடமையும் தங்களுக் குரியது என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.