எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஏற்படும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் அருகில் குழபத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எரிபொருள் நெருக்கடி காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸ்உத்தியோகத்தர்களிற்கு 4000 துவிச்சக்கர வண்டிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.