யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் நேற்று மாலை 06.30 மணியளவில் தீவிபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதனால் குறித்த கலையகத்தினுள்ளே புகைமண்டலமாக காணப்பட்டது.
இதனை கண்ணுற்ற அங்கிருந்தவர்கள் யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதன்படி குறித்த தீவிபத்து மின்ஒழுக்கினால் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்டுகிறது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.