ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதில் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
கோட்டாபய பதவி விலகல்
கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன இன்று காலை அறிவித்திருந்தார்.
ஜுலை 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உத்தியோகபூர்வமாக அவர் பதவி விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்கள், பொறுப்புக்கள் மற்றும் அரசியலமைப்பினால் பொறுப்பாக்கப்பட்டுள்ள விடயங்களை அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் செயற்படுத்துவார் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.