பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் குலத்திங்கள் போத்தன் – பொன்னம்மா போத்தன் தம்பதிக்குப் பிறந்தவர் பிரதாப் போத்தன்.
இவர், 1978 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில், பிரதாப் போத்தன்(70) சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் மறைவுக்கு திரையுலகினர்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.