முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் பதில் ஜனாதிபதியை சந்தித்து, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி விடுதலைக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.