நாடாளுமன்றம் இன்று (16) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டத்தின் படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
அத்தோடு ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடாளுமன்றத்தின் இரு நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளதானால் வாகன சாரதிகள் மாற்று வழியை உபயோகிக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு விடுத்துள்ளனர்.