பொதுவாக, வறண்ட சருமமாக இருந்தாலும், எண்ணெய் பசையாக இருந்தாலும் அல்லது கலவையான சருமமாக இருந்தாலும் (Skin Health), பருவமழையின் போது சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
மழைக்காலத்தில் முகத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று ஈரப்பதம். மழைக்காலம், சருமத்தின் மீது கூடுதல் அன்பையும் கவனிப்பையும் கோருகிறது. சருமத்தை சீர் செய்ய நீங்கள் பல்வேறு தயாரிப்புகளில் பணத்தை செலவழித்து, தோல் பராமரிப்பு முறைகளை பின்பற்றலாம் அல்லது உங்கள் சருமத்தின் அமைப்பையும் பளபளப்பையும் மேம்படுத்த உங்கள் நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட வீட்டு வைத்தியங்கள் உங்களுக்கு உதவலாம்.
வறண்ட சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்: 10 பாதாம் எடுத்து, அதை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலக்கவும். பிறகுக் முகத்தில் பூசி, 5 முதல் 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
1 டீஸ்பூன் தேனை 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெயுடன் (jojoba oil) கலக்கவும். இதை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எண்ணெய் பசை சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்: எண்ணெய் சருமத்தை சுத்தப்படுத்த ஒரு தூய ஓட்ஸ் ஸ்க்ரப் பயன்படுத்தவும். 2 தேக்கரண்டி ஓட்மீலை சிறிது ஆரஞ்சு சாறு அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து ஸ்க்ரப் செய்யவும். இதை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். பழுத்த பப்பாளி கூழை முகத்தில் பூசி, அது நன்றாக உலர்ந்த பிறகு முகத்தைக் கழுவவும். முகம் அழகாக மாறுவதோடு, சருமம் பொலிவு பெறும்.
கலவையான சருமத்திற்கு மான்சூன் ஃபேஸ் பேக்: 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 2 சொட்டு ஸ்ட்ராபெரி எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடம் உலர விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். எந்த பேஸ் பேக்கை பயன்படுத்தினாலும், முகத்தை கழுவிய பிறகு, உங்கள் தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.