இலங்கையில் தொடரும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சமிக்க கருணாரத்ன இரண்டு நாட்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்து பயிற்சிக்கு செல்லாமல் எரிபொருள் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் காணொளியொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில்,இரண்டு நாட்களாக நான் எரிபொருள் வரிசையில் காத்திருந்து இன்று 10,000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினேன்.
எரிபொருள் இல்லாத காரணத்தினால் என்னால் பயற்சிக்கு கூட செல்ல முடியவில்லை.எரிபொருள் தேவை மிக அதிகமாக உள்ளது.
தற்போது நிரப்பிய எரிபொருள் 2 அல்லது 3 நாட்களுக்கு மாத்திரம் நீடிக்கும்.வெளி இடங்களுக்கு கூட பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



















