சீனாவினால் 1,000 மெற்றிக் டன் அரிசி கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அரிசி வழங்கப்பட்டுள்ளது.
சீன உணவு உதவி திட்டத்தின் கீழ் 10,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டாம் கட்ட அரிசி தொகுதியே பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 9 மாகாணங்களுக்கு உட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்காக ஒரு நேர போசாக்கான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.
இந்த செயற்பாடானது மாணவர்களுக்கு வழங்கப்படும் விஷேட உதவி என இலங்கைக்கான சீன தூதுவர் சிங்ஹொங் (Singhong)தெரிவித்துள்ளார்.