“விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை அபயபுர சந்தியில் நேற்று (17) மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ம் திகதி முதல் அபயபுர சுற்று வட்டத்தில் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்ட ரணில் தமது பதவியில் இருந்து விலகுமாறு கோரி சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திராவினால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.