தென்னை மரத்தின் மூலம் கிடைக்கப் பெரும் பல மிக மதிப்புமிக்க பொருட்களோடு தேங்காய் நாரும் பெரும் பங்கு வகிக்கிறது.
தேங்காய் நாரைக் கொண்டு பாய்கள், கால் மிதிகள், தரை விரிப்புகள் போன்ற பலவகையான பொருட்களையும் தயாரிக்க முடியும்.
இது தெரியாமல் பலர் குப்பையில் வீசி விடுகின்றோம்.
இப்போதும் கூட சில வீடுகளில் தேங்காய் மட்டை அடுப்பெரிக்க பயன்படுகிறது. அதேபோல் விவசாயத்தில் தேங்காய் மட்டையின் பங்கு அளப்பறியது.
தேங்காய் மட்டையைப் பயன்படுத்துவதற்கான சில ஸ்மார்ட் வழிகள் உண்டு. இது குறித்து ழுமுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
வயிற்றுப்போக்கு
தேங்காய் மட்டை நீர் வயிற்றுப்போக்கை நிறுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பிரேசிலின் சில பகுதிகளில் வயிற்று வலியை நிறுத்த உதவும் சில பாரம்பரிய முறைக்கு தேங்காய் மட்டை பயன்படுத்தப்படுகிறது.
இந்த முறையில் தேக்காய் மட்டையை நன்றாக சுத்தம் செய்து, அதன் உமியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வேண்டும்.
இந்த தண்ணீரை பருகுவதால் வயிற்றுப்போக்கு, வலி ஆகியவை குணமடையும்.
வலியை போக்கு தேங்காய் நார் தேநீர்
மூட்டுவலி மற்றும் உடல் வலியால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பாரம்பரிய மருந்தைக் குடிப்பது உங்கள் நிலையை மேம்படுத்த உதவும்.
தேங்காய் மட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
பாத்திரம் தேய்க்க உதவும்
பாரம்பரியமாக, தேங்காய் நார் பாத்திரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நமது முன்னோர்கள் தேங்காய் மட்டையில் இருந்து நாரை மட்டும் பிரித்து, அத்துடன் கரி தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினர்.
துர்நாற்றத்தை நீக்கும்
பெரும்பாலான இந்திய வீடுகளில் பித்தளை பாத்திரத்திரங்களில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க தேங்காய் நாரை பயன்படுத்தும் பழக்கம் இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
மற்றொரு வகையில் தேங்காய் நார் உடன் கற்பூரத்தை சேர்த்து எரிப்பது சமையலறை மற்றும் வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை போக்கவும், கொசு விரட்டியாகவும் பயன்படுகிறது.
பிளேட்டிங்
உணவை ஒரு புதுமையான வழியில் பரிமாற நினைத்தால் அதற்கு தேங்காய் மட்டையை நீங்கள் பயன்படுத்தலாம்.
சுவையான இனிப்பு வகைகள் அல்லது தனித்துவமான உணவுகளை கவர்ச்சிகரமான வகையில் பரிமாறலாம்.
உதாரணமாக சில குளிர்பான கடைகளில் தற்போது தேங்காய் ஓடு மூலம் குளிர்பானங்கள் பரிமாறப்படுவதைப் போல, தேங்காய் மட்டையையும் பிளேட் அல்லது குளிர்பான குவளைப் போல பயன்படுத்தலாம்.
ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்!
தேங்காய் நாரைக் கொண்டு தரை விரிப்புகள், பாய்கள், தூரிகைகள் மற்றும் கரி போன்றவற்றை தயாரிக்க முடியும்.
மேலும் பல்வேறு பொருட்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபரால் கூட தயாரிப்பதற்கு முடியக் கூடிய வகையில் தேங்காய் நார் பல வகையில் உபயோகப் படுகிறது.
பல்வேறு வணிகப் பொருட்கள் தயாரிப்புகளுக்கு உதவக் கூடிய தேங்காய் நார்கள் வணிக ரீதியாகவும் பெரும் மதிப்பை பெரும் ஒரு முக்கிய மூலப் பொருளாக விளங்குகின்றது.
மேலும் இது இயற்கையானதாக இருப்பதால் இதன் மூலம் உருவாக்கப் படும் பொருட்களில் பெரும்பாலும் பக்க விளைவுகள் என்பது இல்லை.