புதிய ஜனாதிபதித் தேர்வு இடம்பெறும்போது எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரியவருகிறது.
இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில், எங்களுக்குள் பேச்சு நடத்தி எடுக்கின்ற ஒருமித்த முடிவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு
கடந்த 14ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
அத்துடன் அதுவரையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.