முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில், அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தினை, 100 ரூபாவிலிருந்து 90 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பினால் இந்த தீர்மானம்
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முதலாவது கிலோமீட்டருக்காக தற்போது அறவிடப்படும், 100 ரூபா கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.