யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எதிர்வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்கப்படும் முறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
அத்துடன், கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட குறித்த எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு கீழ் வரும் கிராமசேவகர் பிரிவுகளின் படி நுணாவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எதிர்வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாழக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
J-301
J-302
J-303
J-304
J-305
J-306
J-307
வெள்ளிக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
J-308
J-309
J-310
J-311
J-312
J-313
J-314
சனிக்கிழமைக்கான தெரிவு செய்யப்பட்ட கிராமசேவகர் பிரிவுகள்
J-340
J-341
J-342
J-343
J-344
J-345
J-346
J-347
இதேவேளை குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உரிய கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக் கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும், ஏனைய கிராமசேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமெனவும் வைத்திலிங்கம் சிவராசா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டு வருபவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமெனவும், அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்




















