பிரபலமான விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் தான் பாலாஜி.
நடிகர் வடிவேல் கெட்டப்போட்டு தான் இந்த அளவிற்கு பிரபலமானார். வடிவேலுவை போல் மிமிக்ரி, பாடி லேங்குவேஜ் என இருந்ததால் இவர் வடிவேல் பாலாஜி என அழைக்கப்பட்டார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி காலமானார்.
வறுமையில் குடும்பம்
மேலும், அவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள், அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் என நிறைய பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
வடிவேல் பாலாஜி உயிருடன் இருந்தபோது அவரது குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இருந்தது. அவர் இறந்த பிறகு அவரது குடும்பத்தினருக்கு உதவ யாரும் வரவில்லையாம்.
இதையறிந்து ஊடகம் பேட்டி எடுக்க சென்ற நிலையில், வடிவேல் பாலாஜி மனைவி மறுத்துள்ளார்.
இதன் பின்னர் அக்கம் பக்க விசாரிக்கையில், அவர்கள் குழந்தைகளின் இரு வேலை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்படுவதாக பாலாஜி மனைவி கூறியதாக தெரிவித்து இருக்கின்றனர்.
சாப்பாட்டுக்கே கஷ்டம்
மேலும் அவரது வீடு ஆங்காங்கே விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது இதனால் மழை தண்ணீர் வீட்டிற்குள் வருவதால் இரு குழந்தைகளுடன் கஷ்டப்படுகிறார் எனவும், அவர்களுக்கு சின்னத்திரை நடிகர்கள் உதவி செய்தால் வசதியாக இருக்கும் என அக்கம்பக்கத்தினர்கள் தெரிவித்து உள்ளனர்.
பலரையும் சிரிக்க வைத்து ரசிக்க வைத்த வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு இந்த நிலையா என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.