ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த பலர், இறுதி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கும் முடிவை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது குழு அண்ணளவாக 120 வாக்குகளை பெற்றுக்கொள்ளும் என நம்பப்பட்டது. எனினும், போட்டி முகாமின் சலுகைகளுக்கு பலர் அடிபணிந்துள்ளனர்.
பொது மக்கள் கருத்தை சட்டத்தை உருவாக்குபவர்கள் உணரவில்லை
நேற்றைய ஜனாதிபதி தெரிவின் போது, விக்ரமசிங்க 134 வாக்குகளை பெற்ற இதேவேளை, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து நாடாளுமன்றம் உணரவில்லை. மேலும் நாடாளுமன்றம் ஊழல் நிறைந்த அமைப்பு என்று பொதுமக்கள் கூறுவது, சட்டத்தை உருவாக்குபவர்களிடம் எந்த உண்மையான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளளார்.