தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,014ல் இருந்து 1,945ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 431-ல் இருந்து 419-ஆக குறைந்துள்ளது.
செங்கல்பட்டில் 207, கோவையில் 179, விருதுநகரில் 97, திருவள்ளூரில் 86, சேலத்தில் 74, காஞ்சிபுரத்தில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெறுவோர் எண்ணிக்கை 15,843ல் இருந்து 15,409ஆக குறைந்துள்ளது. மேலும், 2,379 பேர் வீடு திரும்பியுள்ளனர்.