அருள்நிதி நடிப்பில் ஜூலை 22-ஆம் தேதி வெளியான ‘தேஜாவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘டைரி’. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார்.
இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து ‘டைரி’ படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு யோகான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.