ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் 43 000 டெங்கு ஒழிப்பாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு இந்த மாதத்தில் 8000 நோயாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை தொடருமாயின் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலை, உள்ளிட்ட கட்டடத் தொகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் டெங்கு நோய் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.