இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவை, 2024 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய உத்தரவாதப் பத்திரத்திற்கான வட்டித் தொகையை செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய 175,000,000 அமெரிக்க டொலர் உத்தரவாதப் பத்திரம் தொடர்பான வட்டியை செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்ட விமான நிறுவனம், நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி பொருந்தக்கூடிய சலுகைக் காலத்திற்குள் வட்டி முழுவதுமாக செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.