பொதுவாக நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும்பங்கு காய்கறிகள் வகிக்கிறது. ஏனெனில் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாகவும், நோய் இல்லாமலும் வாழ முடியும் என்று கருதப்படுகின்றது.
ஆனால் சில காய்கறிகளை நாம் அதிகமாக உட்கொள்ளும்போது நமக்கு சில வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் சில நேரங்களில் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.
தற்போது அந்த காய்கறிகள் என்னென்ன என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
காளான்
காளான்களை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அது சில சமயங்களில் ஒவ்வாமைக்கு வழிவகுக்கிறது. மேலும் இந்த உணவின் ஒவ்வாமை காரணமாக தடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
ஷிடேக் காளான்களை சாப்பிடும்போது ஏற்படும் தடிப்புகளுக்கு ஷிடேக் டெர்மடிடிஸ் என்ற பெயர். பச்சை காளான் மற்றும் அரை வேக்காடாக உள்ள காளான்களை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.
கேரட்
அதிகமான கேரட் அல்லது பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் நமது சருமம் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறுகிறது.
நமது கை மற்றும் கால்களில் நிறமாற்றம் அதிகமாக தெரிகிறது. அதிகமாக பீட்டோ கரோட்டின் உள்ள உணவுகளை உட்கொள்ளும் போது, அது ரத்த ஓட்டத்தில் நுழைந்த சருமத்தில் சேமிக்கப்படாமல், நமது சருமத்தின் நிறத்தை தற்காலிகமாக மாற்றுகிறது.
பீட்ரூட்
அளவுக்கு அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவதால் பக்கவிளைவு ஏற்படும். இந்த தாவரத்தில் இருக்கும் தாவர நிறமிகள் மற்றும் ரசாயனங்கள் காரணமாக சிறுநீரின் நிறம் தற்காலிகமாக மாறுகிறது.
பிளாக்பெரி மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் உள்ள கலவைகள் தற்காலிகமாக சிறுநீரின் நிறத்தை இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறமாக மாறுகிறது. இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை.
ஆரஞ்சு ஜூஸ்
ஒரு நாளில் அதிக அளவு வைட்டமின் சி உள்ள உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது சிறுநீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக மாறுகிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் தவிர உடலில் நீர் இழப்பு ஏற்படுவதும் சிறுநீரின் நிறத்தை மாற்றுகிறது. எனவே வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் இது இரைப்பை குடலில் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த காய்கறிகள் சத்தானவையாக இருந்தாலும் எளிதில் செரிமானம் ஆவதில்லை. குறிப்பாக பச்சையாக சாப்பிடும் போது இந்த காய்கறிகள் எளிதில் ஜீரணம் ஆவதில்லை.