முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் உயர் நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மனு தாக்கல்
நாட்டையும் மக்களையும் இந்த நிலைக்கு இட்டு சென்றவர்களுக்கு எதிராக விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மனுவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தனிப்பட்ட பிரதிவாதியாக பெயரிட உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்மானித்துள்ளது.
பிரதம நீதிபதி ஜயந்த ஜயசூரிய, நீதிபதிகளான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது.