ஜனாதிபதி செயலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் இன்று நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-12 உஷைனியா வீதியில் 26 வயதுடைய நபரொருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஜனாதிபதி செயலகம் சேதமாக்கப்பட்டது.
இவ்வாறு ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பனவற்றிற்குள் அத்து மீறி பிரவேசித்து சேதம் விளைவித்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் 150 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.