வில்லன் நடிகர் பொன்னம்பலம் உடல்நிலை கோளாறால் பாதிக்கப்பட்டு கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார்.
சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் தற்போது நலமுடன் இருக்கிறார்.
தனக்கு உடல்நிலை சரியில்லாத போது உதவிய சினிமா பிரமுகர்கள் குறித்து தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் விஜகாந்த் குறித்து பேசிய நடிகர், விஜயகாந்த் எனக்கு கடவுள் போல அவரை நான் இன்னும் நேராக சென்று பார்க்கவில்லை. அவரை நேரில் பார்த்தால் செத்துவிட்டேன்.
எனக்கு கொஞ்ச நாளா இதய நோய், சிறுநீரக நோய் இருக்கு அவரைப் பார்த்தால் என் மனசு தாங்காது. ஒருத்தர் மேல பாசம் வச்சுட்டு அதுவும் அளவு கடந்த பாசம் வைத்து விட்டால் அவர் உடல்நிலை மோசமாக இருக்கும் போது பார்க்க முடியாது.
அதனால் தான் நான் இதுவரை விஜயகாந்தை நேரில் பார்க்கவில்லை.
அவர் இப்போ நல்ல உடல் நலத்தோடு இருந்திருந்தால் அவர்தான் எனக்கு முதல் நபராக உதவி இருப்பார். இதேபோல, சரியான நேரத்தில் எனக்கு உதவி செய்த பல நடிகர்கள் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.