தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை முறையை அதிக எண்ணிக்கையிலானனோர் நேற்று பயன்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டையை 657 எரிபொருள் நிலையங்களில் நேற்று பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பதிவிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி நாடளாவிய ரீதியில் மொத்தம் 962 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இந்த முறைமைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எனவும் நாடளாவிய ரீதியில் 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயற்படுகின்றன” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், 4.6 மில்லியன் வாகனங்கள் இதுவரை கியூ.ஆர் அட்டைக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. 531 எரிபொருள் நிலையங்கள் இந் நடைமுறையை பயன்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



















