எரிபொருள் விநியோகம் நிறைவடைந்ததன் பின்னர் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க, பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை முதல் QR குறியீட்டு முறைமைக்கு அமைய மாத்திரம், எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும், எனவே வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,தேசிய எரிபொருள் கியூ.ஆர் அட்டை ஆகஸ்ட் 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும், கடைசி இலக்க எண் தகடு அமைப்பு அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



















