கொழும்பு,மருதானை பிரதேசத்தில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்த இராணுவச்சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
இவ்வாறு உயிரிழந்த நபர் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கிளார்க் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எவ்வாறு தவறி விழுந்தார் என்பது தொடர்பான விபரங்கள் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



















