வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (02) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவுள்ளது. தொடர்ந்து 25 நாட்கள் நல்லூர் கந்தனின் மகோற்சவ பெரும் திருவிழா நடைபெறவுள்ளது.
அதேசமயம் கொரோனா தொற்றினால் கடந்த வருடங்களில் பக்கதர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அள்விலேயே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வருடம் பெருமெடுப்பில் நல்லூர் கந்தனின் மகோற்சபம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















