நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக களு கங்கையை அண்டி வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் களு கங்கையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி, பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபாத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.



















