எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தளம் பகுதியில் எரிபொருள் நிலையம் அருகில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக லொறி ஒன்றில் காத்திருந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இதற்கு முன்னரும் இவ்வாறான உயிரிழப்புகள் பதவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.




















