பருப்பு, சினி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தின் தொழிற்சங்க குழு உறுப்பினர் தேவபுரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கையில் விண்ணைமூட்டும் அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
இதனால் மக்கள் கடும் திண்டாட்டத்தில் இருந்த நிலையில் தற்போது பொருகளின் விலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றமை மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.