திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டியொன்றில் எரிபொருள் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 200 லீட்டர் டீசல் மற்றும் 100 லீட்டர் பெற்றோல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா – முனைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து முச்சக்கரவண்டியில் எரிபொருளை எடுத்து செல்லும் வழியில் குறித்த முச்சக்கரவண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
8 கொள்கலன்கள் மீட்பு
இதன்போது 4 கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களது வீட்டிலிருந்து 4 கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் எரிபொருளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா – சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரியருகிறது.
சந்தேகநபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், திங்களன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாண்டோ குறிப்பிட்டார்.